கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு சோதனைகள் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது சோதனையில் தடுப்பு மருத்து வெற்றி பெற்றதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆகஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுப்பிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது. இந்த தடுப்பு மருந்தினை 1,077 பேருக்கு செலுத்திய போது கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து வரும் செப்டம்பருக்குள் சந்தைப்பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.