ரொமாண்டிக் சூப்பர்ஹிட் ராஜா ராணியை இயக்கிய அட்லீ, அதைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களான தேரி, மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். அடுத்து அவர் பாலிவுட்-இல் ஷாருக் கான்-ஐ வைத்து படம் எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தன.
அட்லீயின் பாலிவுட் அறிமுக படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் கதாநாயகியாக நடிப்பார் என்றும் ஷாருக்கே இந்த படத்தை தயாரிக்கிறார் என்றும், தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் ஜோடி சேரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. சங்கி என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளதாக தெரிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது, கே.கே.ஆர் அணியின் உரிமையாளராக இருந்த ஷாருக் கான், நீளமான கூந்தலுடன் புதிய தோற்றத்துடன் மைதானத்திற்கு வந்தார்,
இந்த முரட்டுத்தனமான தோற்றம் அட்லீ படத்திற்கானது என்று ஊகிக்கப்படுகிறது அவர் ஒரு கொடிய குற்றவாளி மற்றும் விசாரணைக் காவலராக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.