ஆஸ்திரேலியாவில் 6000 வருடங்களுக்கு முந்தைய ஓவியங்கள் கண்டுபிடிப்பு.

மனிதன் சைகை மொழியுடன் பேசத் தொடங்கியது, ஒலிக்குறிப்புகளுக்கு ஏற்ப தான் பார்க்கிற காட்சிகளை இணைத்துச் சித்திரமாக வரைந்தான்.
அது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நவீன ஓவியங்களாகப் பரிமளித்துள்ளன என்றாலும் அக்காலத்தில் தோன்றிய எழுத்துகள் ,ஓவியங்கள் தான் நமது மனித பரிணாமத்தின் தொடக்கம்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பாராடைல் மலைப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் அறிஞர்கள் 6000 வருடம் பழைமையான ஒரு குகையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக்குகைக்குள் கங்காரு, கடற்பசு எலி இனங்களை அழகாக வரைந்துள்ளனர். இத்தைகைய ஓவியங்கள் மாலிவாவா ஓவியங்கள் எனப்படும். இதை ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளான அபாரிஜின்கள் வரைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.




