8ம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயம்; கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் வண்ணம் கூடுதல் இயந்திரங்களை நிறுவ அறிவுறுத்தல்.

டெல்லி, இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்த போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டது. பின்னர் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்தபட்ச ஊழியர்கள் கொண்டு அலுவலகங்கள் செயல்படத் தொடங்கியது. பின்னாளில்,அதாவது பாதிப்பு குறைய தொடங்கிய பிறகு 50 சதவீதம் என்ற அளவில் ஊழியர்கள் பணிக்கு வரலாம் எனவும் மேலும் குறிப்பிட்ட சில துறைகளில் பணிபுரியக்கூடிய அலுவலர்கள் பணிக்கு நேரடியாக வருவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் இருந்த பயோமெட்ரிக் பதிவேடு முறை ரத்து செய்யப்பட்டிருந்தது. மாறாக நேரடியாக வருபவர்களுக்கு அட்டனன்ஸ் முறையில் பதிவேடு என்பது செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நிலைமை மீண்டும் சீராக தொடங்கியுள்ள சூழ்நிலையில் இம்மாதம் 8ம் தேதி முதல் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மத்திய பணியாளர் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதில்,
- பயோமெட்ரிக் பதிவேடு அருகே சேனிடைசர் வைக்கப்பட வேண்டும், ஓவ்வொரு பணியாளரும் வருகை பதிவு செய்யும் முன்னரும் பின்னரும் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பயோமெட்ரிக் பதிவேட்டில் வருகையை பதிவு செய்யும் போது கட்டாயம் சமூக இடைவெளி ( 6 அடி இடைவெளி ) பின்பற்ற வேண்டும்; கூட்ட நெரிசலை தவிர்க்க தேவைப்பட்டால் அதிக பயோமெட்ரிக் இயந்திரங்களை பயன்படுத்தலாம்.
- வரிசையில் காத்திருக்கும் போது அலுவலகத்திலும் கட்டாயம் முக கவசம் அணிந்தே இருக்க வேண்டும்.
- பயோமெட்ரிக் இயந்திரத்தில் உள்ள ( ஸ்கேனர் ) பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் ஒரு பணியாளர் நியமனம் செய்ய வேண்டும். மேலும், அதே பணியாளர் வரிசையில் உள்ள உழையர்களை ஒழுங்கு படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
- பயோமெட்ரிக் இயந்திரங்களை போதுமான அளவு காற்றோட்டம் அதிகம் உள்ள இடங்களில் வைக்க வேண்டும்;முடிந்த வரை அலுவலகத்தில் நடத்தப்படும் கூட்டங்கள் வீடியோ காண்பிரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்.
மேற்கண்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் 8ம் தேதி முதல் பயோமெட்ரிக் பதிவேடு செய்ய வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




