திராவிட அரசியலை முன்னெடுக்கிறதா பாஜக. என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க ஆனால் ஜெயிச்சாகணும் இதுவே டெல்லி ஆர்டர்

எத்தனையோ மூத்த தலைவர்கள் தமிழகத்தில் இருந்தும், இத்தனை நாள் பாஜக என்ற கட்சி எங்கிருந்தது, எத்தனை இடங்களில் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தை பிடித்தது என்பது கண்டுபிடிக்கவே முடியாத ஒன்றாகத்தான் கடந்த கால அரசியல் இருந்தது… இதை நோட்டாவும் வெளிப்படுத்தியவாறே இருந்தது.
தமிழிசையால் துளிர்த்தது பாஜக என்றுகூட சொல்லலாம். தமிழகத்தில் தாமரை மலர பெரிதும் பாடுபட்டவர் அவர். அதற்கு பிறகு பாஜக என்றாலே அதிருப்திகளுக்குள் நிறைந்து போயிற்று.. தமிழக மக்கள் எதிர்ப்பை அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டது. நிவாரண நிதியில் இருந்து 10 பைசாவைகூட வாங்கி தரவில்லை இப்படி பல வெறுப்புகள்.
இப்படிப்பட்ட சமயத்தில்தான், எல். முருகன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. நாங்க சும்மாவே 60 சீட்களில் ஜெயிப்போம் என்றார்.. இதன் அர்த்தம், அதிமுகவிடம் தங்களுக்கு 60 சீட்களை ஒதுக்க வேண்டும் என்று நூல் விடுவதாகவே பார்க்கப்படுகிறது.. இவ்வளவு சீட் வேண்டும் என்று பேரம் பேசுவதுபோலவே இந்த பேட்டி எடுத்து கொள்ளப்பட்டது. முருகன் இப்படி பேசுகிறார் என்றால், பாஜக மேலிடத்தின் காய் நகர்த்தல் இல்லாமல் இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுமட்டுமின்றி அதாவது, திமுக, அதிமுக தேர்தல் சமயங்களில் என்னென்ன வியூகங்களை கையில் எடுக்குமோ அது முதல், தேர்தல் பணி வரை எல்லாமே திராவிட கட்சிகளின் ஸ்டைலை பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. உதாரணத்துக்கு, பூத் கமிட்டி அமைப்பதில், கடந்த காலங்களில் ஏமாற்றியதுபோல் இந்த முறை ஏமாற்ற முடியாத அளவுக்கு, டெக்னிக்கல் விஷயங்களை கையில் எடுத்துள்ளதாம். இதைதவிர, முக்கிய நகரங்களில் 5 ஆயிரம் பைக்குகளில் ஊர்வலம், பேரணி, பொதுக்கூட்டம் போன்றவை நடத்தவும் திட்டம் உள்ளதாம்..
இப்படிப்பட்ட காரணங்களுக்காகவே பாஜக தலைமை முருகன் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்துள்ளது.. பட்டியலின சமுதாய வாக்குகளை குறி வைத்து முருகனை களமிறக்கினாலும், தற்போது, திமுகவுக்கு எதிராக பாஜக தலைமை, பக்காவாக பிளான்களை அமைத்து வருவது தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்க்க வைத்து வருகிறது என எண்ணுகிறார்கள். என்னும் நடக்க்விருப்பதி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எங்கிறார்கள்.




