நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இந்நிலையில் சென்னையிலுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் அது புரளி என தெரிய வந்தது,விஜயகாந்த் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த அதே நபர் தான் தனுஷ் வீட்டிற்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




