காவிரி நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளது. நீர் வழங்கும் தவணை காலம் ஜூன் மாதம் துவங்கியது. ஆனால், கர்நாடக அரசு முறைப்படி நீரை வழங்கவில்லை. 28.7 டி.எம்.சி. நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து, முறையிடப்பட்டபோது, மழை வந்தால் தருவதாக கர்நாடக அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா காரணமாக, ஓராண்டாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பங்கேற்ற அதிகாரிகள், இன்றைய கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் செப்டம்பர் மாதம் வரை வழங்க வேண்டிய காவிரி நீரை கார்நாடக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் மட்டுமே மேகதாது பற்றி விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி பாசன மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் கோரிக்கையை ஏற்க முடியாது என கறாராக தெரிவித்துள்ளது.




