நிவர் புயல் சேதங்களை முழுமையாக கணக்கிட இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது புதுச்சேரி அருகே கரையை கடந்தது அதன் தாக்கமாக சென்னை கடலூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பொழிந்தது. இதனால் சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியது மேலும் பல்வேறு இடங்களில் மரங்கள் இன்னும் சரிந்த நிலையில் இருக்கின்றன. இதனை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழகத்தின் சேதமான விவரங்களை தமிழ அரசு அண்மையில் வெளியிட்டது. நிவர் புயல் காரணமாக இது வரை தமிழகத்தில் நான்கு பேர் உயிர் இழந்துள்ளனர். மூன்று பேர் காயமடைந்தனர். அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக அமைக்கப்பட்ட 3500 முகாம்களில் 227315 பேர் தங்க வைக்க பட்டுள்ளனர். மேலும் முழுமையாக கணக்கெடுக்கும் பணி தொடர்கிறது.
இந்நிலையில் நிவர் புயல் சேதங்களை கணக்கெடுக்க மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. அவர்கள் நாளை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயல் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.