மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகளிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டம் நடைபெறுகிறது.
மாநாட்டில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காணொலி காட்சி மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காணொலிகாட்சி மூலம் பேசமுடியாததால் அவர் செல்போனில் பேசினார். அது ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில் “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் நாடு முழுவதும் விவசாயிகளிடம் கொந்தளிப்பு ஏற்பட்டு போராட்டம் நடைபெறுகிறது. ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றார்கள். எதுவும் நடைபெறவில்லை.
வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விளை பொருட்களை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இவர்கள் கொண்டு வந்த சட்டத்தின் மூலம் இடைத்தரகர்களை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விளைபொருட்களை வாங்குவார்கள். அதனால் தான் சொல்கிறோம். இந்த சட்டம் நோயைவிட மோசமானதாகும்” என்றார்.