கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை:
கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் இறுதியில் போடப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. செப்டம்பர் 1 ம் தேதி முதல் தமிழக அரசால் பொது போக்குவரத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளித்தது.இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தளர்வுகள் இருந்தாலும் நோய் பரவுதலை தடுக்க முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கூட்டமான இடங்களில் தனி மனித இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் . கோவாக்சின் மருந்தை பரிசோதனை செய்து வருகிறோம் மேலும் அரசு மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைகளில் 300 பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம்.ஆயுர்வேத,சித்த மருந்துகளையும் ஐ.சி.எம்.ஆர். ஒப்புதலுடன் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.




