உலகம் முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த கொடிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்தியாவில் இந்த நோய்க்கு RT PCR கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றது, இந்நிலையில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா சோதனைக் கருவி கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் பணி முடித்துவிட்டு வந்து தங்களுக்கு வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என வீட்டிலேயே சோதனை செய்து கொள்ள பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக அரைமணி நேரத்தில் பரிசோதனை செய்துகொள்ள கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலை விஞ்ஞானிகள் வெறும் ஐந்து நிமிடத்தில் சோதனை செய்துகொள்ள ஓர் டெஸ்ட் கிட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கருவி விமான நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குடிமக்களை சோதனை செய்ய உதவும்.ஐந்து நிமிடத்துக்குள் கொரோனா உள்ளவர் யார் என தெரிந்துகொள்ளப் படுவதால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். இந்த டெஸ்ட் கிட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிட்டனின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் டியூப்களில் திரட்டப்பட்ட டிஎன்ஏ சாம்பிள்கள் பின்னர் நுண்ணோக்கி வழியாக பார்க்கப்பட்டு சோதனை செய்யப்படுகின்றது.இதன்மூலம் வைரஸ் தாக்கி உள்ளதா இல்லையா என எளிதில் தெரிந்துகொள்ள முடிகின்றது. பிரிட்டன் விஞ்ஞானிகளின் இந்த முயற்சி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




