ஆங்காங்கே மக்கள் வெளியில் செல்லத் தொடங்கிவிட்டாலும் நோய்த் தாக்கம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.86 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8.72 லட்சமாக அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டிவிட்டது.
அமெரிக்காவில் 63.35 லட்சம், பிரேசிலில் 40.46 லட்சம், ரஷ்யாவில் 10.09 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 1.91 லட்சம், பிரேசிலில் 1.24 லட்சம், ரஷ்யாவில் 17,528 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
விரைவில் இந்த நோய் உலகை விட்டு நீங்கிவிடும் என்று நம்புவோமாக