படௌடி குடும்பத்தைச் சேர்ந்த சைஃப் அலி கானுக்கும் முன்னணி நட்சத்திரமான கரீனா கபூருக்கும் தைமூர் என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்து பாலிவுட்டையே கலக்கி வருகிறான். அவன் எப்போது வெளியில் தென்பட்டாலும், கேமராக்கள் பின்தொடர்கின்றன. அவன் செய்யும் சுட்டித்தனமான முக பாவங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்கிறது, இதோ சில தருணங்கள்..!
துளி கூட பயப்படாமல் அசால்ட்டாக போஸ் கொடுக்கிறான் இந்த குட்டிப் பையன்!
இந்தக் குட்டியின் ‘பௌட்’ போஸ்-க்கு தனி அழகு தான்!
தன் அப்பா மேல் விளையாடும் அழகைப் பாருங்கள்!
சைஃப் அலி கான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் முதல் மனைவி அம்ரிதாவிற்கும் பிறந்த பெண் சாரா அலி கான் ஒரு வளர்ந்து வரும் நடிகை. இருவருக்கும் இப்ராஹிம் என்ற மகனும் உண்டு.
தனது அக்காவை செல்லமாக கோல்(Gol – ஹிந்தியில் பயன்படும் செல்லப்பெயர்) என்று அழைக்கிறானாம் தைமூர்.