ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வத்தின் பிரிவால் தி.மு.க.வுக்கு எந்த இடர்பாடும் கிடையாது என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வைச் சேர்ந்த ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க. செல்வம், கடந்த இரு தினங்களாக பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்து வந்த நிலையில், அவரைக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், அவரை கட்சியின் நிரந்தர உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, எம்.ஜி.ஆர்., சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது தி.மு.க. சிறிய இடர்பாடுகளைதான் சந்தித்தது. தகரங்களான வி.பி. துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் தி.மு.க.வுக்கு எந்த இடர்பாடும் இல்லை என்று கூறினார்.