திமுக செயலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் பக்கெட்டில் உள்ள செல்போனில் குண்டு துளைத்ததால் அவர் உயிர் தப்பினார்.
வாணியம்பாடி அருகே திமுக செயலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷடவசமாகக் குண்டுகள் செல்போனில் பட்டதால அவர் உயிர் தப்பினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள நாராயணபுரத்தில் வசித்து வருபவர் வேலாயுதம்(50). இவர் அப்பகுதியில் திமுக கிளைச்செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேலாயுதம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிரகாஷம் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் வீட்டுக்குள் சென்ற வேலாயுதத்தை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனில் குண்டு துளைத்தது. துப்பாக்கியால் சுட்ட நபர்கள் ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த வேலாயுதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிசை பெற்று வருகிறார். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் படி இருவரை பித்து விசாரித்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.