நன்றாக இருப்பதாக உணர்கிறேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரொனா அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. மொத்தம் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்த இடத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் இரண்டாம் முறையாக டிரம்ப் போடியிடுகிறார். இவரை எதிர்த்து ஜோபிடன் என்பவர் போட்டியிடுகிறார்.
இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் சமீபத்தில் நிலவியது.
சூறாவளி பிரச்சராம் மேற்கொண்டு வந்த டிரம்ப் க்கு உதவியாக அவரது மனைவி மெலனியாவும் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்களிருவரின் உதவியாளர் ஹோம் ஹிக்சுக்கு (31) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கும் கொரொனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவரும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அமெரிக்க அதிபருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாட்டுகளின் தலைவர்கள் பலரும் அதிபர் டிரம்ப் விரையில் உடல் நலம் பெறம் வேண்டுமென்று வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனையில் கூறுகையில், சிகிச்சைக்கு டிரம்ப் நன்றாக ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த 48 மணிநேரம் மிகவும் முக்கியமானது என்று எச்சரித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் தனது சிகிச்சை குறித்து நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.