துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும் போது காலிகட் சர்வதேச விமான நிலையத்தில் – இரண்டாகப் பிரிந்தது (கரிபூர் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.)
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு இன்று இரவு சுமார் 7.40 மணியளவில், ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-344 விமானம் வந்தது. விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 191 பேர் இருந்தனர்.
இந்நிலையில், கன மழையின் காரணமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கி சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. இதில் விமானத்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. 24 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
முதற்கட்ட விசாரணையில் விமானி உட்பட 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மலப்புரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.