EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது என்று ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தின் மாநில தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
மக்கள் உயிர் வாழ கார்ப்பரேட் கொள்ளை, கொலைகளை தடுத்திட EIA2020 சட்டத்தை எதிர்த்து மக்கள் அனைத்து தளங்களிலும் வலுவாக குரலெழுப்ப வேண்டும்! ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன்மக்களுக்கு வேண்டுகோள்!
சுற்றுச்சூழல் வரைவு திட்ட அறிக்கை EIA 2020 ( Environmental Impact Assessment Act 2020) அதன் பல சட்டத்திருத்தங்கள் மிகவும் ஆபத்தானவை குறிப்பாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இனிமேல் எந்த தொழிற்சாலைகளின் ஆபத்தான செயல்பாடுகளை பற்றி எங்கும் புகார் அளிக்க முடியாது என்பது மிக மோசமானது.
சுற்றுச்சூழல் வரை திருத்த சட்டம்
மக்களுக்கு எதிரானது கடந்த காலங்களில் போபாலில் விஷவாயு கசிவு காரணமாக ஆயிரக்கணக்கில் மக்கள் இரவோடு இரவாக மடிந்ததை நாம் அறிவோம். அதேபோல் தூத்துக்குடியில் வேதாந்தா ஸ்டெர்லைட் தொழிற்சாலை மக்களுக்கு ஆபத்தானது என்பதை அறிந்து மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்த்துப் போராடியதில் 14 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது உலகம் அறிந்ததே.
இது போல் இப்படி யாரும் குரல் கொடுக்ககூடாது என்பதற்காகவே இப்பொழுது இந்த புதிய சுற்றுச்சூழல் வரைவு திருத்த சட்டம் 2020 மத்திய அரசு கொண்டு வர முயற்சி எடுக்கிறது.
இது ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் முறையை தினிப்பதாகும் மத்திய அரசின் தன்னிச்சையான முடிவு ஆகும்.
அதாவது யார் வேண்டுமானாலும் எந்த தொழிற்சாலையையும் எங்கு வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ளலாம் அதற்கு எந்த முன் அனுமதி எதுவும் தேவையில்லை தொழிற்சாலைகள் விதிமுறைகளுக்கு புறம்பாக பிற்காலங்களில் ஏதாவது அந்த தொழிற்சாலையில் இருந்தால் பின்னர் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அதை செலுத்திவிட்டு மீண்டும் தொழிற்சாலையை தொடர்வார்கள் இதை எதிர்த்து சமூக ஆர்வலர்கலோ பொதுமக்கலோ எந்த எதிர்ப்பு குரலும் எழப்ப முடியாது என்ற சொல்லுகிறது இந்த சட்டம். அந்த தொழிற்சாலையால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு அல்லது வேறு பாதிப்பு வந்தால் நஷ்டஈடு கொடுத்துக் கொள்ளலாம் அந்த நேரத்தில் மக்களை சமாளித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறார்கள்.
மேலும் பொது மக்கள் புகார் கேட்பு என்ற முக்கிய விதிகள் அதில் நீக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலை கட்டுப்பாட்டு நடைமுறை அறிக்கை ஆறு மாத கால அவகாசத்தில் இருந்து தற்பொழுது ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது
சுற்றுச்சூழல் வரைவு திருத்த சட்டம்
இது நம் நாட்டின் இயற்கை வளத்தை, மண்னை, விவசாய நிலத்தை சீரழிக்கும் மற்றும் விவசாயம் சார்ந்த நிலங்கள் ஆறுகள் ஏரிகள் குளங்கள் குட்டைகள் கண்மாய்கள், மலைகள் சார்ந்த இடங்களை, அனைத்து இயற்கை வளங்களையும் நாம் தனியார் கார்பரேட்களிடம் இழக்கும் நிலை ஏற்படும்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மகன் பெனிக்ஸ் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் மிகப்பெரிய அளவில் எடுத்து செல்லப்பட்டதற்கான காரணம் சமூக வலைதளங்களிலும் மற்ற அனைத்து தளங்களிலும் பொதுமக்கள் ஒத்த எதிர்ப்பு குரல் எழுப்பியதே காரணமாகும் அதனால்தான் நீதிமன்றமே தானாக வந்து இந்த வழக்கை கையில் எடுத்தது, தமிழக அரசு தானாக வந்து இழப்பீடு தொகை வழங்கியது வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை தந்தது, சிபி சிபிசிஐடி விசாரணை அதோடு சிபிஐ விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது அதேபோல் இந்த சுற்றுசூழல் வரைவு திருத்த சட்டம் விவகாரத்திலும் பொதுமக்கள், சமூக ஆர்லர்லர்கள்,சமுகநல இயக்கங்கள், அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிட வேண்டும்.
எனவே இந்தத் இஐஏ திட்ட அறிக்கையை நிறுத்திட கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி உடனடியாக உங்கள் ஈமெயிலில் இருந்து உங்களுடைய கருத்துக்களை அனுப்பிட வேண்டுகிறேன்.
நம் தேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களையும் காப்பாற்றிடவும் நம் வருங்கால சந்ததியினருக்கு வளமான பூமியை விட்டுச் செல்ல ஒவ்வொரு இந்திய குடிமகனும் மின்னஞ்சல் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன். அதோடு நின்று விடாமல் சமூக வலைதளம் மற்றும் அனைத்து தளங்களிலும் மத்திய கார்பரேட் சாதக பிஜேபி ஆட்சியின் மக்கள் விரோத நம் சந்த்திகளின் விரோத இஐஏ சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பி இஐஏ சட்டம் வருவதை தடுத்திட வேண்டுகிறேன்.