சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பாபாய், மகன் ஷீத்தல்குமார் ஆகியோர் கடந்த 11-ந்தேதி சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கண்காணிப்பு கேமராவில் இருந்து கிடைத்து காட்சிகளில் ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா ஆகியோர் காரில் தப்பிஓடியது தெரிந்தது. இதனை தொடர்ந்து காசிமேடு இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான தனிப்படை போலீசார், புனே நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் காரில் விரட்டி சென்று ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது நண்பர்கள் விஜய்உத்தம், நவீந்திரநாத்கர் ஆகியோர் சென்ற காரை மடக்கி பிடித்தனர்.
தற்போது அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் தலைமறைவாக உள்ள ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகியோர் டெல்லியில் பதுங்கி இருப்பதை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். மேலும் இவர்களை டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்டு கொரோன பரிசோதனை செய்து தனி இடத்தில வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை இவர்களுக்கு வழங்கியது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவரையும் கைது செய்தனர்.