பாலக்காடு அருகே தக்காளி லாரியில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் வாளையார் என்னும் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இதை கடந்துதான் கேரளா செல்ல முடியும். இந்த இடத்தில் தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை அங்கு கேரளா போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது தமிழகத்தில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தனர். அதில் இருந்தவர்கள் ஈரோட்டில் இருந்து அங்கமாலிக்கு தக்காளி லோடு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். ஆனாலும் அவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது மினி லாரியில் தக்காளிகளுக்கு இடையே 35 பெட்டிகளில் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை கைப்பற்றிய போலீசார் லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.அவர்கள் தர்மபுரியை சேர்ந்த ரவி மாற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபு ஆகியோர் என விசாரணையில் தெரியவந்தது.