அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பில் சேர கால நீட்டிப்பு தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் 3 இணைப்பு கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 16,940 மாணவர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 5-ஆம் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, இணையதள விண்ணப்பப்பதிவு வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று அதில் கூறியுள்ளார்.