புத்தகம் வாசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி…

ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நூலைப் படித்தவர்களுக்கு ஏழிலைப்பாலை என்கிற சொல் பரிச்சயமாகி இருக்கும். அந்நூலைப் படித்து சொந்தங்களாய் ஒன்று கூடிய வாசகர்கள் இணைந்து உருவாக்கும் நூல் இது.
ஓவியர் மணியம் செல்வத்தின் அட்டைப்படத்துடன் வெளிவர இருக்கும் இந்நூலில் எழுத்தாளரும், எம்.பி.,யுமான சு.வெங்கடேசனின் பளீர் சுளீர் கேள்வி பதில்கள், மணியம் செல்வத்துடன் உரையாடல், மருத்துவர் கு.சிவராமனின் அனுபவக் கட்டுரைகள், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் கார்த்திக் நேத்தா, கவிஞர் இசையின் அற்புதமான கவிதைகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜனின் சூழலியல் கட்டுரை, எழுத்தாளர் நீலா மற்றும் பேச்சாளர் மானசீகனின் வசீகரிக்கும் கதைகள், தொழிலதிபர் திருப்பதி வாசகனின் பாங்காங் பயணக் கட்டுரை, இவற்றுடன் பல படைப்பாளர்கள் விருந்துகள் படைக்கின்றனர்.
பொங்கல் திருநாளை ஏழிலைப்பாலையுடன் இனிப்பாகக் கொண்டாடுங்கள்.
புத்தகங்களை முன்பதிவு செய்ய : 9944041999 (முன்பதிவு விலை 250/-)




