வைட்டமின் சி ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றது. நமது உடலில் உள்ள திசுக்களுக்கு இவை மிகவும் முக்கியமானது. இதய நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், மகப்பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், கண் நோய்கள், சரும சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க வைட்டமின் சி பயன்படுகிறது.
கொய்யப் பழம்:
- ஒரு கொய்யாப் பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவான 628% உள்ளது.
மஞ்சள் குடைமிளகாய்:
- ஒரு பெரிய மஞ்சள் குடைமிளகாயில் 341 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே இனி இது உணவை அழகுபடுத்துவதோடு மட்டுமில்லாமல் நமது நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
பார்சிலி:
- ஒரு கப் பார்சிலியில் 133 % அளவு வைட்டமின் சி உள்ளது. எனவே இனி உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பார்சிலியையும் உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சிவப்பு குடைமிளகாய்:
- இதிலும் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 1 கப் சிவப்பு குடைமிளகாயில் 317 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதிலுள்ள இதர ஊட்டச்சத்துக்களும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கப் பயன்படுகின்றன.
கிவி:
- 1 துண்டு கிவி பழத்தில் 273 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. சாப்பிடுவதற்கு தித்திக்கும் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய இப்பழத்தில் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
ப்ராக்கோலி:
- ப்ராக்கோலி உடலுக்கு தேவையான காய்கறியாகும். 1 கப் ப்ராக்கோலியில் 135 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. எனவே உங்கள் உணவில் இதை சேர்த்து பயனடையுங்கள்.
லிச்சி:
- இதில் ஏராளமான வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் வைட்டமின் சியில் 71.5 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் பொட்டாசியம் மற்றும் நல்ல கொழுப்பு போன்றவைகளும் உள்ளன.
பப்பாளி:
- 1 கப் பப்பாளியில் 144 % அளவிலான ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. இதில் வைட்டமின் ஏ, போலேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளும் உள்ளன.
ஸ்ட்ராபெர்ரி:
- 1 கப் ஸ்ட்ராபெர்ரியில் 149% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன. இதை நீங்கள் சாலட், ஸ்மூத்தி மற்றும் டெசர்ட் போன்ற உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரஞ்சு:
- 1 ஆரஞ்சு பழத்தில் 163 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்த ஆரஞ்சு பழத்தை நீங்கள் ஜூஸாக அல்லது சாலட் போன்றவற்றின் மூலம் சாப்பிடலாம்.
எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி:
- 100 கிராம் லெமனில் 53 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. 100 கிராம் சாத்துக்குடிப் பழத்தில் 29.1 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இவைகள் கலோரி குறைந்த கொழுப்பில்லாத பழங்கள். எனவே உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றாகும்.
அன்னாசிப் பழம்:
- 1 கப் அன்னாசிப் பழத்தில் 131 % வைட்டமின் சி அடங்கியுள்ளது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.
காலிஃப்ளவர்:
- 1 கப் காலிஃப்ளவரில் 77% வைட்டமின் சி அடங்கியுள்ளது. இதில் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
நெல்லிக்காய்:
- 100 கிராம் நெல்லிக்காயில் 27.7 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, பொட்டாசியம், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.
மாம்பழம்:
- 1 கப் மாம்பழத்தில் 76% வைட்டமின் சி அடங்கியுள்ளது. மேலும் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்து களும் இதில் உள்ளன.