அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது.
இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.