திருவண்ணாமலையில், பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில், கணினி மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிரதமரால் உருவாக்கப்பட்ட இந்த கிசான் நிதி திட்டத்தின் கீழ், 2 ஹெக்டர் விளைநிலம் வைத்திருக்கும் உழவர்கள் வருடந்தோறும் 6000 ரூபாய் 3 பங்குகளாக பெறும்படி வகுக்கப்பட்டது.
இதில், கடலூர் மாவட்டத்தில், விவசாயத் துறை அலுவலரின் கடவுச் சொல் (Password) திருடப்பட்டு, போலிப் பெயர்கள் சேர்க்கப்பட்டதாக புகார் எழுந்தது.
18 ஒன்றியங்களில் சுமார் 32 ஆயிரம் பேருக்கு விவசாயிகள் என போலி ஆவணம் தயாரித்து சுமார் 18 கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதே போல, கடலூர் மாவட்டத்தில் போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இருந்து மேலும் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் என, இதுவரை மொத்தம் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடலூரில் வேளாண் துறை அதிகாரிகளை விட்டுவிட்டு இடைத்தரகர்களை மட்டும் சிபிசிஐடி போலீசார் கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முறைகேடுகளை முறையாக விசாரிக்கக் கோரி பாஜக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கவுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.