மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அரசு ஊழியர் ஒருவர் உயிரிழந்தால், அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இதுவரை 34,427 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோல்கட்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்குவங்கத்தில் கொரோனா வைரசுகு்கு எதிரான போரில் இதுவரை 12 அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இனிமேலும், அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் உயிரிழந்த மருத்துவர், காவலர், மருத்துவப்பணியாளர் ஆகியோரைக் கவுரவப்படுத்தும் வகையில் அவரின் குடும்பத்தாருக்கு பதக்கம், சான்றிதழ் கொடுக்கப்படும். அரசு சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடாகவும் வழங்கப்படும் என மம்தா கூறினார்.