தனக்கு அரசு வேலை கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்த ஆண்டு பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு கூறியிருக்கிறார்.

2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த பாராலிம்பிக்கில் வெள்ளிவென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அவருக்கு குரூப்- 1 பணிக்கான அரசு வேலையான காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று பணிநியமன ஆணையை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து வீரர் மாரியப்பன் தங்கவேலு, எனது கோரிக்கையை ஏற்று முதல்வர் அரசுவேலை வழங்கியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.




