லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
அன்றாட தேவையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வாகன உற்பத்தியில் கால் வாசிக்கு மேலான உதிரிபாகங்கள் தேவைக்கு சீனாவை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான, லித்தியம் அயான் பேட்டரிகள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் லித்தியம் அயான் பேட்டரிகள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விதமாக அதற்கு அதிக வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்படும் மூலதன செலவுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.