தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2016 – 2019ம் ஆண்டுகளுக்கான குரூப் – 1 ல் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (27.07.2020) தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின்போது¸ தலைமை செயலாளர் திரு. சண்முகம்.¸ இ¸ஆ.ப¸ உள்¸ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் திரு. பிரபாகர்;.¸ இ¸ஆ.ப¸ காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி.¸ இ¸கா.ப¸ தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் முனைவர் சி. சைலேந்திர பாபு.¸ இ¸கா.ப¸ கலந்து கொண்டனர்.