அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவிற்கு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் மருத்துவ ஆக்ஸிஜன் மாதம் ஒன்றிற்கு ஆயிரத்து 512 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த ஏப்ரல் மாதத்தில் 902 மெட்ரிக் டன்னாக இருந்தது.
மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவில் சுமார் 15 ஆயிரம் மெட்ரிக் டன்னிற்கும் மேலாக இருப்பு உள்ளது. அதை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் எந்த பிரச்னையும் இல்லை. ஆக்ஸிஜனை பயன்படுத்தி சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4.58 சதவீதமாக குறைந்துள்ளது என பியூஸ் தெரிவித்தார்.