ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்டு 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வரும் 3ம் தேதி (ஆகஸ்டு 3) புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்டு 27ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




