மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் வீட்டு படிகட்டுகளில் இறங்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அம்மா, மகன் இருவரும் வீட்டின் படிக்கட்டுகளில் இறங்கும்போது அதிர்ச்சி அடைகின்றனர். அதற்கு காரணம், படிகட்டில் படுத்திருக்கும் பாம்பு. சிறுவன் தெரியாமல் பாம்பின் அருகில் சென்ற நிலையில் சுதாரித்த அவனது அம்மா, அவனை தடுத்து தூக்குகிறார். இந்த காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. மேலும், மழைக்காலத்தில் இதுபோன்ற விச சந்துக்கள் உலாவும்.நாம் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் கேப்ஷனாக குறிப்பிடப்பட்டுள்ளது.