130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பாரிமுனையில் , சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. நிலுவை தொகையாக அந்த 130 கடைகளில் மட்டும் ₹40 லட்சம் வரவேண்டி உள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக, 130 கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும், வாடகையை டிடியாக (வரைவோலையாக) எடுத்து சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளனர்.