தமிழக மின்வாரியம் சார்பில் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மின் தடை, மின்சார விபத்து, மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகள் உள்ளிட்ட புகார்களை தெரிவிப்பதற்கு வசதியாக, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை 9498794987 என்ற செல்பேசி மூலம் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த நிலையில், தற்போது அரசின் அனைத்து துறைகளும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப்பக்கங்களை பயன்படுத்துவதால் மின்வாரியமும் கணக்குகளைத் தொடங்கியுள்ளது.
ட்விட்டர் (@TANGEDCO)
இன்ஸ்டாகிராம் (tangedco)
இதில் மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள், மின்கட்டண விழிப்புணர்வு விவரங்கள் பதிவிடப்படுகின்றன. அத்துடன் புகார்களையும் பொதுமக்கள் அளிக்கலாம்.மேலும், தங்களது ஆலோசனைகளையும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




