கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய கட்டணத்தை பள்ளிக்கல்வித்துறை குறைத்து நிர்ணயித்துள்ளது.

கட்டணத்தை உயர்த்தி வழங்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட குறைவான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, எல்கேஜி, யுகேஜி & 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ₹12,076 என நிர்ணயம் செய்துள்ளது. இதேபோன்று 6ஆம் வகுப்பிற்கு ₹15,711ம், 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பிற்கு ₹15,711 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




