ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்து நோயாளிகள் அவதியுறும் வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஒரு வாரம் மழை பெய்தால் போதும் சென்னையே வெள்ளக்காடாய் மாறிவிடும். அதிமுக, திமுக என ஆட்சிகள் மாறினாலும் மக்களின் அவலநிலை மட்டும் இன்னும் மாறியபாடில்லை.இதற்கு சென்னை மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழைநீர் புகுந்து நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அப்பாவி ஏழை மக்கள் மருத்துவமனையில் படுத்திருக்கும் கட்டில் முழுவதும் தண்ணீர் நிரம்பியுள்ளது. அவர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாய் இருக்கிறது.




