உணவகங்கள் தங்களது மெனு கார்டில் உணவு வகைகளுடன் சேர்த்து அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற நடைமுறையை fssai கொண்டுவர இருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு இந்த அறிவிப்பை fssai (இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்) வெளியிட்டது.இதனை நடைமுறைக்கு கொண்டு வர ஜனவரி 1,2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும், அது நீட்டிக்கப்பட்டு ஜூலை 1 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதனை நடைமுறைக்கு கொண்டுவர உணவகங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நடைமுறையின் மூலம் இனி உணவுப்பிரியர்கள் தங்களது ஆர்டரில் உள்ள பர்கர், பீட்சா, பட்டர் சிக்கன் என அனைத்து உணவுகளின் கலோரிகளையும் மெனு கார்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இது kcal என குறிப்பிடப்பட்டிருக்கும் என தெரிகிறது. உடல்பருமன் (obesity) சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக இங்கிலாந்தில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பேர் உடல்பருமனுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.




