ஒரு வருடமாக கணவனால் கழிவறைக்குள் பூட்டிவைக்கப்பட்ட பெண்ணை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர்.
அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண் தனது கணவரால் ஒரு வருடத்திற்கும் மேலாக கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்டார். அந்த பெண்ணை, பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடை அதிகாரி ரஜினி குப்தா தனது குழுவினருடன் மீட்டார்.
இவரை மீது எடுத்தவுடன் பலரும் இந்த சம்பவத்தை பற்றி இவரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். இதை பற்று ரஜினி குப்தா குறையாது அறியானைவை சேர்ந்த ஒரு பெண்ணை அவருடைய கணவர் ஒரு வருட காலமாக ஒரு கழிவறைக்குள் பூட்டிவைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது இதனையொட்டி இவரின் குழு அந்த பெண் இருந்த இடத்திற்கு சென்று உள்ளனர்.
நாங்கள் இங்கு வந்தபோது, அது உண்மை என்று நாங்கள் கண்டறிந்தோம். பெண் பல நாட்களாக எதையும் சாப்பிடவில்லை என்று தெரியவந்தது. அந்த பெண்ணை அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறுகின்றனர். அனால் அது உண்மை இல்லை அவருடன் நாங்கள் பேசினோம் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக தோன்றவில்லை.
நாங்கள் அவளை மீட்டு தலைமுடியைக் கழுவினோம். நாங்கள் போலீஸ் புகார் அளித்துள்ளோம். அதன்படி போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் கூறினார். மேலும் இந்த சம்பவத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.