காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு? பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.
டெல்லி,
இந்தியா வரலாற்றில் நீண்ட காலம் 114 தடை உத்தரவு அமலில் இருந்த மாநிலம் என்றால் அது “ஜம்மு காஷ்மீர்” மாநிலம் தான். அதற்கு காரணம், பயங்கரவாதிகள் ஊடுருவல் மற்றும் தாக்குதல் அதிகம் இருக்கும். மேலும், மக்களின் நடமாட்டம் அமைதியை சீர்குலைக்கும் என அஞ்சப்படுவதால் 144 தடை என்பது அமலிலே இருக்கும். இத்தகைய சூழலில் தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலத்தின் இயல்பு நிலை படிப்படியாக முன்னேறி வந்தது. மாநிலத்தின் அமைதியை நிலைநாட்டும் நிலைநாட்டும் வகையிலும், இயல்பு நிலையில் வைத்து கொள்ள சமீப நாட்களாக மத்திய அமைச்சர்களின் துறை சார்ந்த ஆலோசனை கூட்டம், எம்.பி-கள் விசிட் என மற்ற மாநிலங்களை போல இயல்பு நிலை சற்றே முன்னேற்றம் ஆனது.
ஆனால், கடந்த சில வாரங்களாக காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது திடீர் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளி ஆசிரியர், வெளிமாநில தொழிலாளர்கள் என 11 பேர் தீவிரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் உள்துறை பாதுகாப்புக்கும் எல்லை பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை காஷ்மீர் காவல்துறையிடம் இருந்து முறைப்படி தேசிய புலனாய்வு அமைப்பு விரைவில் ஏற்று கொள்ளவுள்ள நிலையில் வழக்கு தேசிய புலனாய்வுக்கு மாற்றம், அங்கு நிலவும் சூழல், பாதுகாப்பு அதிகரிப்பு, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து டெல்லியில் பிரதமர் மோடியிடம் அமித்ஷா விளக்கம் அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடைபெற்று வரும் பிரதமர்-உள்துறை அமைச்சர் ஆலோசனை என்பது நடைபெற்று வருகிறது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்று இருப்பதாக கூறப்படுகிறது.