ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியின் 4-வது தொடரானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நேற்று காலை துவங்கியது. 17ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ‘ஏ’ பிரிவில் எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா போன்ற அணிகளும் ‘பி’ பிரிவில் இந்தியா, ஜப்பான், ஹாங்காங், தென்ஆப்பிரிக்கா போன்ற அணிகளும் இடம் பிடித்து இருக்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே அரைஇறுதிக்கு முன்னேற தகுதி பெறும். தொடக்க நாளான நேற்று நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் ஜப்பான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜப்பான் 3-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.அடுத்த படியாக தொடர்ந்து இரவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற ஒரு கோல் கணக்கில் ஹாங்காங்கை எளிதில் சாய்த்து தனது சவாலை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது நமது இந்திய அணி.