ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கொல்கத்தா அணி 164 ரன்களை குவித்தது.
அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள பஞ்சாப் அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் களமிறங்கியது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் வென்ற கொல்கத்தா அணி வெற்றிப்பயணத்தது தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் பேட்டிங்கை தொடர்ந்தது.
தொடக்க வீரராக களமிறங்க கடந்த ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிபாதி, 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த நிதிஷ் ராணா 2 ரன்கள் எடுத்திருந்த போது, நிகோலஸ் பூரானால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனிடையே,மறுபுறம் நிதானமாக ஆடிய மாற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார்.
துணை கேப்டன் மார்க்கன் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் நோக்கில் நிதானமாக ஆடிய நிலையில், 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பிஷ்னாய் பந்துவீச்சில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
தொடர்ந்து, களமிறங்கிய தொடரில் சுத்தமாக பார்ம் அவுட்டில் இருந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசினார்.
57 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 3 ரன்களில் நடையை கட்டினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் கடைசி பந்தில் ரன் அவுட் ஆன கார்த்திக், 29 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிகசர்களுடன் 58 ரன்களை குவித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
பஞ்சாப் அணி தரப்பில் ஷமி, பிஷ்னாய் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை விழ்த்தினர்.