மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே இன்று முதல் மதுபானம் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மதுபானம் விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை காண்பித்து மதுபானங்களை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைக்கு மது வாங்குபவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.




