
நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ’99 சாங்ஸ்’ படத்தை பார்த்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ’99சாங்ஸ்’ படத்தை பார்த்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்போது இவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






