முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு குஷ்பூ, தனது ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து நிருபர்களிடம் பேசினார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு கூறியதாவது:-
நான் வேறு கட்சியில் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி எனக்கும் முதலமைச்சர் தானே. நான் தமிழகத்தில் தானே இருக்கிறேன். எனவே அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தேன். இதில் தவறு இல்லை.
2021-ம் ஆண்டு தேர்தல் ஒரு மாறுபட்ட தேர்தலாக இருக்கப் போகிறது. தி.மு.க.வில் கருணாநிதி, அ.தி.மு.க.வில் ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தலாக இருக்கும். இரு கட்சிகளுக்கும் புதிய தேர்தலாக இருக்கும். ” என்று பத்திரிகை நிருபர்களிடம் கூறினார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு அரசு மட்டும் காரணம் கிடையாது. மக்கள் எத்தனை பேர் முகக் கவசத்துடன் செல்கின்றனர். எத்தனை பேர் சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனர்.
நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
என்று அவர் தெரிவித்தார்.