சைலன்ஸ் படத்தைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இரண்டு படங்கள் நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாக இருக்கிறது.
கொரோன காரணத்தினால் உலகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவிலும் ஊரடங்கு ஆறு மாத காலம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் சில தளர்வுகளுடன் அனைத்தும் நடந்து வருகின்றது. ஊரடங்கு விதிக்கப்படடுபோது அதில் திரையரங்குகளுக்கு மூடப்பட்டது அதனால் படங்கள் ஓ.டி.டி. அதினில் ரிலீஸ் ஆகி வருகின்றது.
இதனை திரையராகினு உரிமையாளர்கள் எதிர்த்து வருகின்றனர். கூடிய விரைவில் திரையரங்குகளை தக்க பாதுகாப்புடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் சினிமாவின் சில சிறந்த அடிகர்களின் படமும் தற்போது ஓ.டி.டி ரிலீஸ் தான் என்ற நிலை இப்போது. இதனடிப்படையில் புதிய படங்களை ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. விஜய்சேதுபதியின் க.பெ.ரணசிங்கம், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், அனுஷ்காவின் சைலன்ஸ், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டியில் வந்தன. சூர்யா நடித்துள்ள சூரரை போற்று வருகிற 30-ந்தேதி ஓ.டி.டியில் வருகிறது.
மேலும்தீபாவளி பண்டிகையில் விஷாலின் சக்ரா, சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களையும் ஓ.டி.டி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இந்த நிலையில் மாதவன் நடித்துள்ள மாறா படம் ஓ.டி.டியில் ரிலீசாக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். திலீப் குமார் இயக்கி உள்ளார். மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015-ல் திரைக்கு வந்த சார்லி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி உள்ளது. மேலும் மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படத்தையும் ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தை நடக்கிறது.