தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையே கடந்த 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூட்டம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் வகையில் இல்லை. மிதமான அளவில்தான் இருக்கிறது. தற்போதைய சூழலில் பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துவருகிறோம் என தெரிவித்தார்.