பாஜகவின் ஹெச்.ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் பற்றி தொடர்ந்து அநாகரீகமான முறையில் பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
முன்னதாக, நேற்று நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய, அநாகரிகமான கருத்தினை ஹெச்.ராஜா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.




