அப்படித் தான் செய்வேன், இது என் கோவில். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மீரா மிதுன்.
பிக்பாஸ் மூலமாக பிரபலமான பலருல் இவரும் ஒருவர். மீரா தங்க்கு தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். பாலிஉட் நடிகர் ஷுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் மரணத்திற்கு பின்பு தமிழ் சினிமாவிலும் நெபடிசம் அதாவது வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி பேச்சு கிளப்பிவிட்டார். இதையடுத்து கோலிவுட்டிலும் நெபடிசம் இருக்கிறது. விஜய், சூர்யா ஆகியோர் நெபடிசம் ப்ராடக்டுகள். அந்த இரண்டு பேரும் தங்களின் தந்தைகளால் தான் கோலிவுட்டில் நிலைத்து நிற்கிறார்கள் என்று கூறி வருகிறார் மீரா மிதுன்.
அதுமட்டுமின்றி தன் டிவிட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சூரியாவை பற்றி மிக தரைகுறைவாக பதிவிட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் ரசிகர்கள் அவ்ர்களை மிக நல்ல நல்ல வார்த்தையில் திட்டினர். அதற்கு அவர் பதிலளிக்க என காரசாரமாக போய்க்கொண்டிருந்தது இவரின் பதிவுகள்.
சிறிது நாட்களாக எதுவும் பேசாமல் இருக்கிறாரே என்று அனவரும் குழம்மி இருக்க மீண்டும் சர்ச்சைக்கு ரெடியாகிவிட்டார். மீரா மிதுன் மும்பையில் செட்டில் ஆனதில் இருந்து ட்விட்டரில் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதை பார்ப்பவர்கள் உங்களுக்கு நடிப்புத் திறமையின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் தான் உடம்பை காட்டுகிறீர்கள் என்று விளாசினார்கள். அது ஏன் கிளீவேஜை மறைக்காமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடுவது இல்லை. இப்படி உடம்பை காட்டுவதில் இருந்தே உங்களின் கேரக்டர் தெரிகிறது. ஏன் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுக்கிறீர்கள் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள்.
இப்படி மீரா மிதுன் உள்ளாடை அணியாமல் லோ கட் உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது. நான் ஃபிளான்ட் பண்ணுவேன். இது என் கோவில். உங்களுக்கு என்ன பிரச்சனை மக்களே என்று கேட்டுள்ளார். எப்பொழுது பார்த்தாலும் இப்படி அரைகுறை ஆடையில் இருக்கிறீர்களே, உங்களுக்கு என்ன பிரச்சனை?. உங்கள் கோவிலை அனைவருக்கும் காட்ட வேண்டாம். உடை வாங்க காசு இல்லையா?. எங்களுக்கு பிரச்சனையே நீங்கள் தான். நீங்கள் இப்படி மோசமாக உடை அணிந்தால் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடத் தான் கூப்பிடுவாங்க. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று தெரிவித்துள்ளனர்.