தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின் நள்ளிரவில் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பின்னர் விஷாலுடன் கமிட் ஆகும் நிலையில் இருந்தார் அந்த படமும் ஆரமித்து ஷூட் போய் கொண்டு இருந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார்.
தற்போது இவர் ஒரு ட்வீட் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டது யாதெனில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை செப்டம்பர் 20ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்க உள்ளதாக மிஷ்கின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




