பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து உரையாடி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்திய பிரதமர் மோடி -சீனா அதிபர் ஸீ ஜின்பெங் சந்திப்பு தமிழகத்தில் பாரம்பரியமிக்க இடமாக மாமல்லபுரத்தில் முறைசாரா சந்திப்பு மாநாடாக நடைபெற்றது.
இந்த சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததுடன் கடந்த 7 ஆம் நூற்றாண்டின் செதுக்கப்பட்ட பல்லவர்கள் கால கலைச்சிற்பங்கள், குகைஓவியங்கள், ஓவியங்கள், கோவில்கள் எனப்பலவும் மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுற்றுலாத் தளமாக உலகின் கவனத்தை வசீகரித்தது.
பின்னர் மோடி, அங்குள்ளா அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்ட பாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளையும் அதன் சிறப்பம்சங்களையும் சீன பிரதமருக்கு விளக்கினார்.
பண்டைய காலத்திலிருந்து தமிழக – சீனாவில் வணிகத் தொடர்புகள்,கலாச்சாரத் தொடர்புகல்ள் இருந்ததால் இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு நடத்த இந்த இடம் தேர்வாவனது ஒரு வரலாற்று நிகழ்வு.
அத்துடன் தமிழர்களின் கலாச்சாரப் பிரதிபலிப்பாகவும் பாரம்பரிய உடையாகவும் இருக்கும் வேட்டி சட்டை அணிந்து வந்த பிரதமர் தமிழர்களின் கவனத்தைப் பெற்றதுடன் நம் உடையை உலகிற்கு அறிமுகம் செய்தார்.
அப்போது இரு நாட்டு உறவுகள், குறித்து உரையாடியதுடன் கலைநிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.